என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளை நிலம்"
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நத்தம்- துவரங்குறிச்சி இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 4 சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அதோடு அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். எனவே இந்த பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க தேவை இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் அதனை மீறி அதிகாரிகள் நிலம் சர்வே பணியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் நேரடியாக திண்டுக்கல் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனுகொடுத்தனர்.
சென்னை:
சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவை, திருச்சி, ஈரோடு போன்ற 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 40-க்கு 90 மீட்டர் அளவுக்கு அமைக்கப்படுவதால் ஒரு ஏக்கர் 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் பல முறை போராடி வந்த நிலையில் இப்போது சென்னைக்கு வந்து போராடும் நிலை எற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கின்றனர். அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மின்துறை அமைச்சர் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பாதிக்கப்படும் விவசாயிகள் முதல்- அமைச்சரை சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதில் கேபிள் வழியாக கொண்டு செல்ல சாத்தியமில்லை என அமைச்சர் கூறி வருகிறார். ஆனால் 400 கிலோ வாட் மின்சார கேபிள்களை சாலை ஓரம் அமைக்க முடியும்.
கேரளாவில் 325 கிலோ வாட் திறன் கொண்ட கேபிள் சாலையோரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கேபிள் வழியாக மின் வழித் தடங்களை கொண்டு செல்ல பரிசீலனை செய்ய வேண்டும். உயர்மின் கோபுரத்துக்கு பதிலாக தரையில் கேபிள் வழியாக செயல்படுத்தும் போது 10 சதவீத மின் இழப்பு சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மற்ற உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர். #MKStalin
ஈரோடு:
ஈரோடு மூலக்கரை பிரிவில் இன்று விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள்.
இன்று (வியாழக்கிழமை) அவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஈரோடு அடுத்த மேட்டுக் கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை முதல் எந்த கடையும் திறக்கப்பட வில்லை. 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் மேட்டுக்கடை பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணி முதல் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
கோவை:
கோவையில் சுல்தான் பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப் பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப் பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.
காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுல்தான் பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொடர் உண்ணா விரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனிதனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். உண்ணாவிர போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு தொடர் போராட்டம், மற்றும் தொடர் உண்ணா விரதப்போராட்டம் நடை பெற்று வருகிறது.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலூரில் அனைத்து கடைகள்,மற்றும் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடியில் விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத் தின்போது விவசாயிகள் ஆறுகளூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 26), இளையப்பன் (40), பெரியகுட்டிமடுவு பகுதியை சேர்ந்த குமார் (30), ராமகிருஷ்ணன்(32) ரத்த அழுத்தம், உடல் நிலை கோளாறு காரணமாக மயங்கி விழுந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது.
நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள் தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று பெருமாள், பொன்னுசாமி, முருகவேல், கே.சுப்ரமணியம், நடராஜன், முத்துசாமி, சி.சுப்ரமணியம், பழனிசாமி, சுரேஷ், பச்சியப்பன் ஆகிய 10 பேர் பங்கேற்றனர். இதில் சுப்ரமணியம், நடராஜன், பழனிசாமி ஆகிய 3 பேருக்கு ரத்தஅழுத்தம் குறைவின் காரணமாக திடீரென தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது.
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பிரிவில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. பல்வேறு நூதன வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
6 பெண்கள் உள்பட 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உண்ணா விரதம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.
இதனால் 6 பெண்கள் உள்பட 11 பேரும் தொடர் உண்ணாவிரதத்தால் சோர்வாக உள்ளனர்.
இவர்கள் உண்ணா விரதத்துடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரதம் ஒரு புறம் நடக்க விவசாயிகள் தங்கள் இடுப்பில் வேப்பிலை கட்டி கொண்டு வாயில் அருகம் புல்லை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் அனுமதி இல்லாமல் விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தருமபுரியில் சோம்பட்டியில் இருந்து அதியமான் கோட்டை, சின்னப்பட்டி, பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, இண்டூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இந்த கோபுரங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசின் நிறுவனமான பவர் கிரீடு ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்று பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சத்தீஸ்கர் மாநிலம் ரெய்க்கார்க் நகரில் இருந்து புகலூர் வரை பவர்கிரீடு சார்பில் உயர்மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் அனுமதி இல்லாமல் அவர்களை மிரட்டி இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினோம்.இதனால் கொஞ்சகாலம் இந்த பணியை நிறுத்தி வைத்திருந்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த பணியை தொடங்கி உள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். விவசாய நிலங்களில் உயர்மின் பாதை அமைப்பதைவிட சாலைக்கு அடியில் மின் கேபிள் பதிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறோம்.
அதை செய்தாலே நன்றாக இருக்கும் பழைய திட்டத்தின் படி விவசாய நிலங்களில் மின் பாதை அமைத்தால் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
புதிய திட்டத்தன் படி நிலத்துக்கு அடியில் கேபிளை பதிக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்